close
Choose your channels

தன்னை கடவுளா நினைச்சுகிட்டு இருக்குற சைக்கோ.. 'இறைவன்' படத்தின் 2 நிமிட ஸ்னீக்பீக் வீடியோ..!

Monday, September 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த ‘இறைவன்’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் ஏற்கனவே வெளியான இந்த படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் இரண்டு நிமிட வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் உள்ள காட்சிகளை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. வில்லன் ராகுல் போஸ் விதவிதமாக பெண்களை இரவு நேரத்தில் கொலை செய்வதும் அவனை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் குறித்த காட்சிகள் இதில் உள்ளன.

இந்த கொலைகள் செய்தவன் ஒரு சைக்கோ என்றும், சந்தோசத்திற்காக கொலை செய்து வருகிறான் என்றும், தன்னை கடவுள் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் சைக்கோ தான் கொலைகாரன் என்றும் காவல்துறையினர் கண்டுபிடிக்கின்றனர்.



இதனை அடுத்து ஜெயம் ரவி மற்றும் காவல்துறையினர் கொலையாளியை எப்படி பிடிக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை. ஒரே ரத்தம், கொலை என வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் தான் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் இந்த படம் ஒரு த்ரில், கதையம்சம் கொண்ட சஸ்பென்ஸ் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.