close
Choose your channels

அஜித்துடன் நடிக்க ஆசை.. 'ஜெய்லர்' பட மாஸ் நடிகர் பேட்டி..!

Saturday, August 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித்துடன் நடிக்க ஆசை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெய்லர்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த மாஸ் நடிகர் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெய்லர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் ரஜினியை இயக்குனர் நெல்சன் வித்தியாசமாக காண்பித்து இருப்பார் என்பதும் அவரது மாஸ் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பது தெரிந்ததே.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், மற்றும் ஜாக்கி ஷெராப் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்ததனர் என்பதும், இந்த காட்சிகள் இந்த படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ‘ஜெய்லர்’ படத்தில் நடித்த சிவராஜ்குமார் சமீபத்தில் பேட்டி அளித்த போது 'தனக்கு அஜித்துடன் நடிக்க ஆசை என்று கூறினார். அது நடக்குமா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் அஜித் நடித்த ’விஸ்வாசம்’ திரைப்படம் போன்று ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு மிகுந்த ஆசை என்றும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.