close
Choose your channels

'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' பாடல்.. தமன்னாவின் செம்ம கிளாமர் டான்ஸ்..!

Thursday, July 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் இந்த பாடல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். தமன்னாவின் கிளாமர் நடனத்தில் உருவாகியுள்ள இந்த பாடல் முதல் முறை கேட்பதற்கு அட்டகாசமாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த பாடல் படத்தில் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தமன்னா முதல் முறையாக நடித்துள்ளதால் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.