close
Choose your channels

'இங்க நான் தான் கிங்.. நான் வச்சது தான் ரூல்ஸ்':  'ஜெயிலர்' பாடலின் புரமோ வீடியோ..

Saturday, July 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற ’காவாலா’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடலான Hukum என்ற பாடல் வரும் 17ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் சற்றுமுன் இந்த பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குரலில் இடம்பெற்ற மாஸ் வசனம் இடம் பெற்றுள்ளது. அந்த வசனம் பின்வருமாறு:

ஏய் இங்க நான் தான் கிங், நான் வச்சதுதான் ரூல்ஸ். அதை நான் இஷ்டத்துக்கு மாத்திக்கிட்டே இருப்பேன், அத கப்சிப்ன்னு கேட்டுகிட்டு ஃபாலோ பண்ணனும், அத விட்டுட்டு ஏதாவது அடாவடித்தனம் பண்ணுன, உன்ன கண்டதுண்டா வெட்டி கலைச்சு போட்டுடுவேன்’

இந்த வீடியோவில் ஸ்டைலாக ரஜினிகாந்த் துப்பாக்கியால் சுடும் காட்சி இருப்பதை பார்த்து ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.