close
Choose your channels

ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஜோதிடம் கூறுவது என்ன?

Monday, December 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உடல்நிலை மோசமானது. இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்களால் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஜோதிடம் என்ன கூறுகின்றது என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
ஜெயலலிதாவின் ஜாதகப்படி டிசம்பர் 5 வரை அதாவது இன்றுவரை நெருக்கடியான நேரம் இருப்பதாகவும், இன்று இரவை அவர் கடந்துவிட்டால் அவருக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் ஜோதிடர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் ஜோதிடர்களின் ஆலோசனையின்படி பல்வேறு ஆலயங்களில் விஷேச பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. முதல்வர் விரைவில் குணமாகி தனது வழக்கமான பணியை தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.