close
Choose your channels

ஜெயம் ரவியின் 'போகன்' ரிலீஸ் தேதி

Tuesday, October 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு கோலிவுட்டின் வெற்றி நாயகனாக வலம் வந்த ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டு 'மிருதன்' படம் மட்டுமே இதுவரை வெளிவந்துள்ளது. இந்நிலையில் 'தனி ஒருவன்' படத்தை அடுத்து மீண்டும் அரவிந்தசாமியுடன் ஜெயம் ரவி நடித்து வந்த 'போகன்' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படம் இவ்வாண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கிறிஸ்துமஸ் விடுமுறை தின வாரத்தில் அதாவது டிசம்பர் 23ஆம் தேதி வெளிவரவுள்ளதாகவும், விரைவில் இந்த படத்தின் டீசர் வெளிவரவுள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் ஜெயம் ரவியின் சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி, அரவிந்தசாமி, ஹன்சிகா, அக்ஷரா கெளடா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தி 'ரோமியோ ஜூலியட்' பட இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ளார். பிரபுதேவாவின் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.