close
Choose your channels

ஜெயம் ரவியின் 'இறைவன்' ரிலீஸ் தேதி இதுவா? சிவகார்த்திகேயனுடன் மோதலா..?

Friday, May 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான ‘இறைவன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ள நிலையில் அநேகமாக ‘இறைவன்’ மற்றும் ’மாவீரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயம் ரவி நடித்த ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக ஜெயம் ரவியின் அருள்மொழிவர்மன் கேரக்டருக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே. இந்நிலையில் ஜெயம் ரவி வித்தியாசமான கேரக்டரில் நடித்த ‘இறைவன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தை வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தை ’என்றென்றும் புன்னகை’ அகமது இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரி வேதாந்த் ஒளிப்பதிவில் மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படமும் ஜூலை இரண்டாவது வாரம் தான் வெளியாகும் என கூறப்பட்டு வரும் நிலையில் ’மாவீரன்’ ‘இறைவன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் மோதுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.