close
Choose your channels

சகோதரியுடன் நீச்சலுடையில் 'லுங்கி டான்ஸ்' பிரபல நடிகை!

Friday, November 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவர் தனது சகோதரியுடன் நீச்சல் உடையில் துபாயில் லுங்கி டான்ஸ் ஆடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் என்பதும் இவர் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஜான்வி கபூர் தனது சகோதரி குஷிகபூருடன் இணைந்து துபாயில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ளார்.

அதில் ஜான்வி கபூர் மற்றும் குஷிகபூர் ஆகிய இருவரும் நீச்சல் உடையில் கலக்கி வருகின்றனர் என்பதும் இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜான்வி கபூருக்கு இன்ஸ்டாகிராமில் 13 மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்கள் இருப்பதால் அவரது இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை 7 லட்சத்திற்கும் அதிகமாக லைக்ஸ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

’லுங்கி டான்ஸ்’ என்ற கேப்ஷனுடன் வெளியாகி இருக்கும் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களது பாணியில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.