close
Choose your channels

'கவலை வேண்டாம்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள்

Tuesday, November 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜீவா நடிப்பில் டிகே இயக்கிய 'கவலை வேண்டாம்' வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த படம் ஏற்கனவே சென்சாரில் 'யூ/ஏ சான்றிதழ் பெற்றுவிட்டதாகவும், 'யூ' சான்றிதழுக்காக மீண்டும் சென்சாருக்கு அனுப்பப்பட்டதாகவும் வெளிவந்த செய்தியை நாம் பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்திற்கு 'யூ/ஏ சான்றிதழ்தான் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சான்றிதழுடன் தான் வரும் வெள்ளி அன்று இந்த படம் வெளியாகவுள்ளது.
மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 134 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 14 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது., ஜீவா, காஜல் அகர்வால், பாபிசிம்ஹா, ஆர்ஜே பாலாஜி, சுனைனா மற்றும் பலர் நடித்த இந்த படத்தை எல்ட்ரெட் குமாரின் ஆர்.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
கடந்த சில வருடங்களாக ஜீவாவின் படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாத நிலையில் இந்த படம் கண்டிப்பாக அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.