close
Choose your channels

'கபாலி'க்காக விடுமுறை அறிவித்த அஞ்சலி பட நிறுவனம்

Wednesday, July 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியை திரையில் தரிசிக்க உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஜூலை 22ஆம் தேதியை நோக்கி காத்திருக்கும் நிலையில் கோலிவுட் திரையுலகினர்களும் மிகுந்த ஆர்வத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கியுள்ளனர்.
ஏற்கனவே வெங்கட்பிரபுவின் 'பிளாக் டிக்கெட்' நிறுவன ஊழியர்களுக்கு ஜூலை 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை பார்த்தோம். இந்நிலையில் ஜெய்-அஞ்சலி நடித்து வரும் 'பலூன்' படக்குழுவினர்களும் ஜூலை 22ஆம் தேதி படப்பிடிப்பை ரத்து செய்து அன்றைய தினம் 'கபாலி' படம் பார்க்க வசதியாக விடுமுறை அளித்துள்ளனர்.
தன்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு விடுமுறை அளித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு 'பலூன்' பட இயக்குனர் சினேஷ் நன்றி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள ரஜினி ரசிகர்கள் 'கபாலி' ரிலீஸ் தினத்தை கொண்டாடவுள்ள நிலையில் அந்த கொண்டாட்டத்தில் 'பலூன்' படக்குழுவும் இணைவதில் பெருமை அடைவதாக சினேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.