close
Choose your channels

கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்கள்

Thursday, June 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்கள்

கார்த்தி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு ரிலீசுக்கு முன்னரே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் சற்றுமுன் கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இந்த படம் வரும் ஜூலை 13ஆம் தேதி வெளியாகவுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மிக விரைவில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் இணையதளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி, சாயிஷா,  பிரியா பவானி சங்கர், சத்யராஜ், பானுப்ரியா, பொன்வண்ணன், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் சூர்யாவும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டி.இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் விவசாயிகளின் பெருமையை போற்றும் வகையிலான கதையம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.