close
Choose your channels

பிரபல இயக்குனரின் இயக்கத்தில் கமல்ஹாசன் - மகேஷ்பாபு?

Monday, June 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தந்த மொழியிலுள்ள பிரபலங்கள் அந்தந்த மொழியில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது தென்னிந்திய பிரபலங்கள் இணைந்து நடிக்கும் திரைப்படங்கள் பல உருவாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது கமல்ஹாசன் மற்றும் மகேஷ் பாபு இணைந்து நடிக்கவுள்ள திரைப்படம் ஒன்றின் தகவல்கள் கசிந்துள்ளன

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸின் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் மகேஷ்பாபு இணைந்து நடிக்கும் படம் ஒன்று உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ஏஆர் முருகதாஸ் கூறியபோது ’இந்த படத்தின் பணிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும் இது முழு வடிவம் பெற இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்றும் தற்போது உள்ள சூழலில் இருபெரும் நடிகர்களும் தாங்கள் ஏற்கனவே கமிட்டான படங்களில் இருப்பதால் அந்த படங்களை முடித்து விட்ட பிறகு இந்த படம் உருவாகும் என்றும் கூறியுள்ளார்

கமல்ஹாசன் மற்றும் மகேஷ்பாபு இணையும் படம் உறுதி செய்யபப்டால் இந்த படம் அகில இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் இரு தரப்பு ரசிகர்களுக்கும் மாபெரும் விருந்தாக அமையும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.