close
Choose your channels

91 நாட்கள் கழித்து எவிக்சன் என்றால் என்ன காரணம்? மனசாட்சியுடன் பேசும் கமல்ஹாசன்..!

Sunday, December 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 91 நாள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் இரண்டே வாரத்தில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும். இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் 10 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் 5 போட்டியாளர்கள் மட்டுமே இறுதி போட்டிக்கு செல்ல முடியும் என்பதால் மீதமுள்ள ஐந்து போட்டியாளர்களை இந்த வாரம் மற்றும் அடுத்த வாரத்தில் வெளியேற்ற வேண்டும்.

அந்த வகையில் இந்த வாரம் இரண்டு பேர் எவிக்சன் செய்யப்படுவார்கள் என்று ஏற்கனவே செய்தி வந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் கமல்ஹாசன் அதை உறுதி செய்துள்ளார்.

இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது, ஆனால் வீட்டில் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று பேசிய கமல்ஹாசன், ’சாரி நான் மனசாட்சியுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறி எவிக்சன் ஆக போகும் போட்டியாளர்களின் பெயர் கொண்ட அட்டையை எடுக்கிறார்.

அதன் பிறகு ’91 நாள் ஆச்சு, இந்த நேரத்தில் ஒருத்தர் வெளியே போகிறார் என்றால் என்ன காரணமாக இருக்க முடியும்? என்றும் கமல்ஹாசன் கூறுகிறார். இதனை அடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் 2 போட்டியாளர்கள் யார் யார் என்பதோடு இன்றைய அடுத்த புரோமோ முடிவடைகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே இன்றைய எபிசொடில் ரவீனா மற்றும் நிக்சன் ஆகிய இருவரும் தான் வெளியேறுகிறார்கள் என்ற செய்திகள் ஏற்கனவே வெளியாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.