close
Choose your channels

ஓட்டுனர் வேலை இழந்த ஷர்மிளாவுக்கு கமல்ஹாசன் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

Monday, June 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் கோவையில் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா வேலை இழந்த நிலையில் அவர் சொந்த தொழில் தொடங்க கார் வாங்கி கொடுத்து கமல்ஹாசன் இன்ப அதிர்ச்சி கொடுத்த தகவல் வெளியாகி உள்ளன.

கோவையை சேர்ந்த பெண் பேருந்து ஓட்டினார் ஷர்மிளா தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் கோவை வந்த திமுக எம்பி கனிமொழி அவரது பேருந்தில் பயணம் செய்தார். அப்போது ஷர்மிளாவுக்கும் அதே பேருந்தில் பணிபுரிந்த நடத்துனருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து பேருந்து உரிமையாளர் ஷர்மிளாவை பணியில் இருந்து நீக்கியதாக கூறப்பட்டது.

இதுகுறித்து பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் அவருக்கு வேறு வேலை வாங்கி தருவதாக கனிமொழி எம்பி உறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில் ஷர்மிளாவை சென்னைக்கு வரவழைத்த கமல்ஹாசன், அவருக்கு புதிய கார் வாங்கி கொடுத்துள்ளார். இந்த காரை வைத்து அவர் சொந்தமாக தொழில் செய்யுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார். தனியார் பேருந்து ஓட்டுனராக இருந்த ஷர்மிளா தற்போது காருக்கு சொந்தக்காரர் ஆகியுள்ள நிலையில் அவர் இனிமேல் தனது சொந்த காலில் நிற்பார் என்பது குறிப்பிடத்தக்கது,.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.