close
Choose your channels

கமல்ஹாசனின் 'விக்ரம்': எதிர்பார்த்தது ரூ.100 கோடி, ஆனால் வசூல் எவ்வளவு தெரியுமா?

Monday, June 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் ஆகும் என்று டிரேடிங் வட்டாரங்கள் கணித்திருந்தன. ஆனால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் வசூல் ஆன தொகை மிகப்பெரிய அளவில் ஆச்சரியத்தை அனைவருக்கும் அளித்துள்ளது

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 900 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் சுமார் 2500 திரையரங்குகளிலும் வெளியானது

தமிழ், மலையாளம், இந்தி தெலுங்கு உள்பட அனைத்து மொழிகளிலும் வெளியான இந்தப் படம் முதல்நாளே உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய் வசூலானது. இதனை அடுத்து இந்த படம் மூன்று நாள்களில் 100 கோடி வசூலாகும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் கணிப்பையும் மீறி இந்த படம் உலகம் முழுவதும் 3 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதும் தமிழகத்தில் மட்டுமே இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

கமல்ஹாசன் படங்களிலேயே மிக அதிகமான ஓப்பனிங் வசூல் செய்த படம், இந்த படம் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதே ரீதியில் வசூல் சென்றால் இந்த படம் விரைவில் 300 கோடி வசூலை தாண்டும் என்றும் டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.