close
Choose your channels

53 வயதில் பரதநாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கமல்-ரஜினி பட நடிகை..!

Friday, April 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் உடன் நடித்த நடிகை ஒருவர் 53 வயதில் பரதநாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.



உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’எனக்குள் ஒருவன்’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சிவா’ உள்பட பல தமிழ் திரைப்படங்களிலும் தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்தவர் நடிகர் ஷோபனா. இவர் பழம்பெரும் நடிகை நாட்டிய பேரொளி பத்மினியின் நெருங்கிய உறவினர் ஆவார்.

நடிகை ஷோபனா தற்போது திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தி வருகிறார். அந்த வகையில் பினராயி பூர்ணா என்ற பரதநாட்டிய நடன நிகழ்ச்சி நாளை கேரளாவில் நடைபெற உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக பயிற்சி செய்யும் நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது



நடிகை ஷோபனா ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பதும் சென்னையில் பரதநாட்டிய பயிற்சி அகடமி வைத்திருக்கின்றார் என்பதும், இதில் பலர் பரதநாட்டியம் நடனத்தை பயின்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.