close
Choose your channels

இதுவரை இல்லாத சாதனை.. 48 மொழிகளில் ரிலீசாகும் 'கங்குவா' .. டீசருக்கு குவியும் பார்வையாளர்கள்..!

Wednesday, March 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் உருவான ’கங்குவா’ படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில் இந்த டீசருக்கு மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் கிடைத்துள்ளன என்பதும் இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’கங்குவா’,. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் தமிழில் தயாரானாலும் உலகில் உள்ள 48 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இது தமிழ் திரை உலகில் மட்டும் இன்றி இந்திய திரை உலகில் இதுவரை இல்லாத சாதனையாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை ’கங்குவா’ படத்தின் டீசர் ரிலீஸ் ஆன நிலையில் 24 மணி நேரமே இன்னும் முடிவடையாத நிலையில் 14 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த டீசரை பார்த்து உள்ளனர் என்பதும் ஆயிரக்கணக்கான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த டீசர் வெளியானதிலிருந்து படத்தின் எதிர்பார்ப்பும் உச்சத்தை எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.