close
Choose your channels

தனுஷை அடுத்து பிரபல நடிகருக்கு ஜோடியான 'கர்ணன்' நாயகி!

Wednesday, April 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் தனுஷ் மட்டுமின்றி அனைத்து நடிகர் நடிகர்களின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து என்பதும் குறிப்பாக நாயகி ரஜிஷா விஜயனின் நடிப்புக்கு விமர்சகர்களின் பாராட்டு மழை பொழிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜிஷாவுக்கு தமிழ் திரையுலகில் நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர். அவர்கள் கூறியது போலவே தற்போது ‘கர்ணன்’ படத்தை அடுத்து பிரபல நடிகர் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தில் ரஜிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.

சமீபத்தில் வெளியான கார்த்தியின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது என்பதும், இந்த படத்திற்கு ’சர்தார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தில் கார்த்தி மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ள நிலையில் அதில் ஒரு கார்த்திக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்து வருகிறார். இன்னொரு நாயகியாக பிரபல நடிகை ராஷிகண்ணா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தென்காசியில் நடந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.