close
Choose your channels

கார்த்தியின் முதல் பாலிவுட் படம் இதுதான்

Wednesday, January 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது மார்ச் 24ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த படத்தை இந்தியிலும் டப் செய்து வெளியிட மணிரத்னம் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவல் உண்மையெனில் கார்த்தியின் முதல் பாலிவுட் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பைலட் வேடத்தில் கார்த்தியும், டாக்டர் வேடத்தில் அதிதிராவ் ஹைத்ரியும் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை தமிழகத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.