close
Choose your channels

கார்த்திக் சுப்புராஜ் அடுத்த படத்தில் ஈழத்தமிழ் இயக்குனர்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

Sunday, January 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் திரைப்படத்தை ஈழதமிழ் இயக்குனர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தொடங்கிய சொந்த நிறுவனம் ஸ்டோன் பென்ச். இந்த நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பாக ’மேயாத மான்’ ’பேட்ட’ ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்பட பல வெற்றி படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தை ஈழத்தமிழ் இயக்குனர் சோமேத்ரன் என்பவர் இயக்க உள்ளார். ‘நீளிரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நவீன் சந்திரா, கபிலா வேணு, சனத், விது, ரூபா கொடுவாயூர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.