close
Choose your channels

'காசே தான் கடவுளடா' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்.. புதிய தேதியை அறிவித்த படக்குழு..!

Tuesday, May 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர் கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவான ’காசேதான் கடவுளடா’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் மே 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தேதியிலும் இந்த படம் வெளியாகாத நிலையில் தற்போது மீண்டும் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1972 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் முத்துராமன், எம்ஆர்ஆர் வாசு, வெண்ணிற ஆடை மூர்த்தி உட்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’காசேதான் கடவுளடா’. இந்த படத்தின் ரீமேக்கில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகிய இந்த படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாரான நிலையில் கடந்த மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் மே 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது மே 26 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த தேதியிலாவது இந்த படம் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, ஊர்வசி, கருணாகரன், ஷிவாங்கி, புகழ், தலைவாசல் விஜய், மனோபாலா, விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். ராஜ் பிரதீப் இசையில் பிரசன்னா குமார் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.