close
Choose your channels

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த 'காசே தான் கடவுளடா'.. இந்த முறையாவது ரிலீஸ் ஆகுமா?

Saturday, April 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குநர் ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவான 'காசேதான் கடவுளடா’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த முறையாவது ரிலீஸ் ஆகுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

இயக்குநர் ஆர் கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவான திரைப்படம் ’காசேதான் கடவுளடா’. கடந்த 1972 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் முத்துராமன், எம்ஆர்ஆர் வாசு, தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி உட்பட பலர் நடிப்பில் உருவான படத்தின் ரீமேக் தான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கடைசியாக மார்ச் 24ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நிலையில் தற்போது மே 12ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, ஊர்வசி, கருணாகரன், ஷிவாங்கி, புகழ், தலைவாசல் விஜய், மனோபாலா, விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். ராஜ் பிரதீப் இசையில் பிரசன்னா குமார் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.