close
Choose your channels

விஜய்சேதுபதியின் 'கவண்' படத்திற்கு கிடைத்த கூடுதல் போனஸ்

Friday, March 31, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இன்றைய ஓப்பனிங் வசூல் பிரமாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் 'கவண்' படக்குழுவினர் உற்சாகமாக இருக்கும் நிலையில் கூடுதல் போனஸாக இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைத்துள்ளது. இந்த தகவல் படகுழுவினர்களை மட்டுமின்றி விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக 2வது முறையாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள இந்த படத்தில் டி.ராஜேந்தர், விக்ராந்த், தமிழரசன், ஜெகன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில், அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.