close
Choose your channels

நெல்சன் படத்தில் நடிப்பதை உறுதி செய்த கவின்.. நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவு..!

Thursday, May 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் நெல்சன் நேற்று ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் அந்த நிறுவனத்தின் முதல் படம் குறித்து அறிவிப்பு மே 3ஆம் தேதி வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் அந்த படத்தில் கவின் தான் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கவின் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை செய்து அதனை உறுதி செய்துள்ளார்.
.
பிரபல இயக்குனர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த வரிசையில் நேற்று நெல்சன் ஒரு புதிய திரைப்பட நிறுவனத்தை தொடங்கி இருப்பதாக அறிவித்திருந்தார்.

இந்த நிறுவனத்தின் முதல் படம் குறித்த அறிவிப்பு மே 3ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் அதில் கவின் தான் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் நெல்சனின் உதவியாளர் இயக்க இருப்பதாகவும் இது ஒரு பிளாக் காமெடி படம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கவின் தனது சமூக வலைத்தளத்தில் சற்று முன் 'எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு அறிவிப்பு நாளை வரப்போகிறது, எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

நாளை தான் தனது முதல் பட தயாரிப்பு திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று நெல்சன் அறிவித்த நிலையில் நாளை தனது படத்தின் புதிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக கவின் தெரிவித்துள்ள நிலையில் நெல்சன் தயாரிப்பில் கவின் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நேற்று தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதாக நெல்சன் அறிவித்தபோது கவின் ’வெற்றிகள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணன்’ என்று கவின் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.