close
Choose your channels

'வேதாளம்' ரீமேக் தங்கை கேரக்டருக்கு ஜி.வி.பிரகாஷ் நாயகி

Friday, November 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் அஜித் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன்கல்யாண் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இந்த படத்தை 'ஜில்லா' இயக்குனர் ஆர்.டி.நெல்சன் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கின்றார்.
'வேதாளம்' திரைப்படம் அண்ணன் -தங்கை செண்டிமெண்ட் படம் என்பதால் தங்கை கேரக்டருக்கு முன்னணி நடிகையை படக்குழுவினர் தேடி வந்தனர். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷூடன் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா, 'கடவுள் இருக்குறான் குமாரு' போன்ற படங்களில் நடித்த ஆனந்தி, லட்சுமிமேனன் நடித்த தங்கை கேரக்டரில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்த நாயகி கேரக்டருக்கு தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.