close
Choose your channels

டான்ஸ் ஆடும்போது குறுக்கே வந்த ஹீரோ, கடுப்பான கீர்த்தி சுரேஷ்.. வைரல் வீடியோ..!

Tuesday, March 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை கீர்த்தி சுரேஷ் ஆர்வத்துடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் போது ஹீரோ ஒருவர் குறுக்கே வந்ததை அடுத்து கடுப்பான அவர் அவரை பிடித்து தள்ளிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் நானி நடிப்பில் உருவான திரைப்படம் ’தசரா’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகிய இந்த படத்தை ஸ்ரீகாந்த் என்பவர் இயக்கி உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகிய இந்த படம் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ரூபாய் 65 கோடி பட்ஜெட்டில் உருவாகிய இந்த படத்தில் சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ், சாய்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்,. இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’தசரா’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அப்போது திடீரென ஹீரோ நானி குறுக்கே வந்ததை அடுத்து அவரை பிடித்து தள்ளும் காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

கீர்த்தி சுரேஷின் இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ பதிவு செய்து ஒரு நாள் மட்டுமே ஆகி உள்ள நிலையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர் என்பதும் குறிப்பாக சமந்தா, மாளவிகா மோகனன், ஐஸ்வர்யா ராஜேஷ், கீதாஞ்சலி செல்வராகவன் உள்ளிட்டோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.