close
Choose your channels

கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்தின் பூஜை.. மாஸ் டைட்டில் அறிவிப்பு..!

Saturday, July 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்த ‘மாமன்னன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்தின் பூஜை என்று சென்னையில் நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன

நடிகை கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே ‘சைரன்’, ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தெலுங்கில் அவர் சிரஞ்சீவியின் ’போலோ சங்கர்’ படத்தில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்திற்கு ‘கண்ணிவெடி’ என்ற மாஸ் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் டிவியின் பிரபல விஜே ரக்சன், நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை கணேஷ் ராஜ் என்பவர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் இந்த படம் உருவாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.