close
Choose your channels

சூர்யாவின் 'கங்குவா' படத்தில் இணைந்த 'கேஜிஎப்' நடிகர்.. வேற லெவல் வில்லனா?

Thursday, June 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சென்னையில் இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது ’கேஜிஎப்’ திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் அவினாஷ் என்பவர் இணைந்துள்ளதாக தெரிகிறது.

இவர் இந்த படத்தில் இடம்பெறும் சரித்திர கால பகுதியில் வில்லனாக அவினாஷ் நடிக்க இருப்பதாகவும் ’கேஜிஎப்’ படத்தை விட மிரட்டலாக இந்த படத்தில் அவருடைய கேரக்டர் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை நடிகர் அவினாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வரும் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.