close
Choose your channels

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படம்.. டைட்டிலுடன் கூடிய மாஸ் வீடியோ..!

Tuesday, October 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் 75 ஆவது படம் கடந்த ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் ஜெய், இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரேணுகா, சத்யராஜ், குமாரி சச்சு, அச்சு குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பூர்ணிமா ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு ’அன்னபூரணி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் டைட்டில் உடன் கூடிய டீசர் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த நயன்தாரா சிக்கன், மட்டன் புகைப்படங்களை வீட்டுக்கு தெரியாமல் மறைந்து பார்க்கும் காட்சிகள் கொண்ட இந்த படத்தின் வீடியோ நல்ல எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.



தமன் இசையில் உருவான இந்த படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.