close
Choose your channels

எதிர்பாராத திருப்பம்.. நயன்தாராவின் 75 வது படத்தின் இசையமைப்பாளர் இவரா?

Friday, April 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75 வது திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக சற்றுமுன் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா நடிக்கும் 75வது படத்தில் ’ராஜா ராணி’ நடிகர் ஜெய் இணைந்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் நீல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை ட்ரைடென்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் பூஜை மார்ச் மாதம் நடந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைப்பாளர் என ரசிகர்கள் பலரும் கணித்திருந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் என சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



தமன் இசையில் உருவான விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் நயன்தாராவின் படத்தின் மூலம் தமிழ் படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.