close
Choose your channels

இரண்டு விதமான 'லியோ' ரிலீஸ்.. புதிய அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

Wednesday, September 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கான முன்பதிவு ஏற்கனவே இங்கிலாந்து உட்பட ஒரு சில நாடுகளில் முடிந்துவிட்டது என்பதும் இங்கிலாந்தில் வரலாறு காணாத அளவில் மிகப்பெரிய எண்ணிக்கையில் டிக்கெட் விற்பனை ஆகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் மட்டும் ‘லியோ’ திரைப்படத்தை இரண்டு வெர்ஷனில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ‘லியோ’ திரைப்படத்தை எந்தவித ’கட்’டும் இல்லாமல் என்ன சான்றிதழ் கிடைக்கிறதோ அதை அப்படியே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய அனைத்து காட்சிகளையும் பார்க்கும் வாய்ப்பு உண்டு.

அதே நேரத்தில் சில நாட்கள் கழித்து பெரும்பாலான ரசிகர்கள் பார்த்த பிறகு 12 வயதுக்கு உட்பட்டவர்கள் பார்க்கக்கூடிய வகையில் மீண்டும் சென்சார் சர்டிபிகேட் பெற்று அதன் பிறகு வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே ‘லியோ’ திரைப்படம் இரண்டு விதமான வெர்ஷனில் இங்கிலாந்தில் வெளியிடப்படும் என்ற தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.