close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் லிப்கிஸ்: மீண்டும் ஒரு மருத்துவ முத்தமா?

Friday, June 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தினமும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சற்றுமுன் இன்றைய நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளிவந்துள்ளது. இதில் இரண்டு பேர் லிப் கிஸ் அடித்து கொள்ளும் காட்சிகள் இருப்பது பார்வையாளர்களுக்கு ஆர்வி-ஓவியா மருத்துவ முத்தத்தை ஞாபகப்படுத்தியுள்ளது.

இன்றைய பிக்பாஸ் முதல் புரமோ வீடியோவில் மும்தாஜ் கையை பிடித்து கொண்டு நடந்து வரும் பாலாஜி, ஐஸ்வர்யாவும் வைஷ்ணவியும் ஆடும் நடனம், ஹாரிக்கும் யாஷிகாவும் சிரித்து பேசி கொண்டாட்டமாக இருப்பது, செண்ட்ராயன் தலையில் முட்டையை உடைக்கும் வைஷ்ணவி, நித்யாவுக்கு ஊட்டி விடும் பாலாஜி, ஆகிய சுவாரஸ்யமான காட்சிகள் உள்ளது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஆண்வேடத்தில் உள்ள ஜனனி ஐஸ்வர்யாவுக்கு லிப்கிஸ் அடிக்கும் காட்சியும் உள்ளது. இது ஓவியா, ஆரவ் மருத்துவ முத்தத்தை ஞாபகப்படுத்துவது போல் உள்ளது.

இதனால் இன்றைய நிகழ்ச்சி வழக்கத்தை விட அதிக சுவாரஸ்யமாக இருக்குமா? அல்லது வழக்கம்போல் புரமோ வீடியோ பரபரப்புக்காக மட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.