close
Choose your channels

'தலைவர் 171' படத்திற்கு முன் அன்பறிவ், அனிருத்துடன் ஒரு படம்.. லோகேஷ் கனகராஜின் மாஸ் திட்டம்..!

Tuesday, September 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தலைவர் 171’ படத்தின் அறிவிப்பு நேற்று அதிகாரபூர்வமாக வெளியானது என்பதும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் அன்பறிவ் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ரஜினிகாந்த் விரைவில் ’தலைவர் 170 ’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் ’தலைவர் 171’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ‘தலைவர் 171’ படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பே சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் அக்டோபர் மற்றும் நவம்பரில் நடைபெற இருப்பதாகவும் இந்த படத்தை முடித்துவிட்டு தான் ’தலைவர் 171’ படத்தின் ஆரம்பகட்ட பணிகளை லோகேஷ் கனகராஜ் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கவுள்ளனர் என்பதும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் இதுவரை திரைக்கு பின்னால் இருந்து பணிபுரிந்த நிலையில் முதல் முறையாக இருவரையும் திரைக்கு முன் அன்பறிவ் கொண்டு வரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.