close
Choose your channels

'பிகில்' இயக்குனருக்கு வாழ்த்து கூறிய 'மாஸ்டர்' இயக்குனர்!

Sunday, April 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த பிகில் உள்பட ஒருசில வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லிக்கு, விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் வாழ்த்து தெரிவித்துள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

இயக்குநர் அட்லியின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’அந்தகாரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் கொரோனா பரபரப்பு முடிந்தவுடன் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து தற்போது இந்த ட்ரைலரை பார்த்த ’மாஸ்டர்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் விக்னேஷ் ராஜனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மிகவும் புத்திசாலித்தனமாக இந்த படம் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் இப்படி ஒரு படத்தை நான் இதுவரை பார்த்ததில்லை என்றும் இந்த படத்தின் இயக்குனர் உள்பட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் என்றும் குறிப்பாக நடிகர் அர்ஜுன் தாஸ் மிகவும் அருமையாக நடித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தை தயாரித்து இந்த படத்தை ரிலீஸ் செய்ய முன் வந்த இயக்குனர் அட்லிக்கும் தனது வாழ்த்துக்கள் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாலிவுட் பிரமுகர் கரண்ஜோஹர் உட்பட பல பிரமுகர்கள் ’அந்தகாரம்’ படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.