close
Choose your channels

கவின் திருமணத்தன்று லாஸ்லியா போட்ட பதிவு.. பதிலடி கொடுத்த மோனிகா..!

Thursday, August 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கவின் சமீபத்தில் தனது நீண்ட நாள் தோழியான மோனிகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்தன்று பிக்பாஸ் லாஸ்லியா செய்த பதிவுக்கு தற்போது மோனிகா பதிலடி கொடுக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை செய்துள்ளார்.

கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் ஒருவரை சந்திக்கவில்லை என்றும் காதல் பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் தான் கவின் மற்றும் மோனிகா திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் மோனிகாவும் லாஸ்லியாவும் தோழிகள் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கவின் - மோனிகா திருமணம் நடந்த போது, திருமணத்தன்று லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை’ என்று சூசகமாக கவின் திருமணம் குறித்து பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவிற்கு தற்போது மோனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’அதிகாரபூர்வமாக நான் கவினின் மனைவி ஆகிவிட்டேன்’ என்று பதிலடி கொடுத்துள்ளார். இந்த இரண்டு பதிவுகளையும் நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.