close
Choose your channels

நயன்தாராவின் அடுத்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்!

Wednesday, September 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் அவரது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலண்ட் ராவ் இயக்கும் படம் ஒன்றின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். த்ரில் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நயன்தாராவுடன் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் லியூக் கென்னி அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் சமீபத்தில் ஒளிபரப்பான ‘Sacred Games’ என்ற த்ரில் வெப் தொடரில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தர்பார்', மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'சயிர நரசிம்மரெட்டி, தளபதி விஜய்யின் 'பிகில் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ள நிலையில் மிலண்ட் ராவ் இயக்கும் த்ரில் படத்தின் படப்பிடிப்பில் விரைவில் நயன்தாரா கலந்து கொள்ளவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.