close
Choose your channels

2024ல் பாராளுமன்றம், 2028ல் சட்டமன்றம்.. விஜய் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு..!

Thursday, May 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மதுரையில் உள்ள விஜய ரசிகர் மன்றத்தினர் 2024 பாராளுமன்றமே, 2026 சட்டமன்றமே என்ற வாசகங்களுடன் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்பேத்கர் பிறந்த நாள், தீரன் சின்னமலை பிறந்தநாளில் அவர்களுடைய சிலைகளுக்கு மாலை அணிவித்து விஜய் ரசிகர் மன்றத்தினர் மரியாதை செலுத்த வேண்டும் என விஜய் தரப்பிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து பிரமாண்டமாக ஒரு பொதுக்கூட்டம் நடத்தி அதில் பரிசளிக்கவும் திட்டமிட்டு இருப்பதாகவும் அதில் விஜய் தனது அரசியல் வருகை குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அவ்வப்போது போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தும் மதுரை விஜய் ரசிகர்கள் தற்போது ஜூன் 22ஆம் தேதி பிறந்தநாள் காணும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர் அடித்துள்ளனர். அதில் 2024 பாராளுமன்றமே, 2026 தமிழக சட்டமன்றமே, என்று வாசகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதிலிருந்து வரும் பாராளுமன்ற தேர்தலிலே விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.