close
Choose your channels

'ஆட்டைக்கு ரெடியா'. சிம்புவுடன் இணைந்த 'கபாலி' பாடகர்

Monday, August 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படப்பிடிப்பில் சிம்பு, 'மதுரை மைக்கேல்' என்ற கெட்டப்பில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இந்த மதுரை மைக்கேல், மதுரை சூப்பர் ஜெயண்ட் கிரிக்கெட் அணிக்காக ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதும், அந்த பாடல் ரிலீஸ் ஆகும் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பிரிமியம் கிரிக்கெட் போட்டி இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் எட்டு அணிகள் விளையாடவுள்ள நிலையில் அவற்றில் ஒரு அணியான 'மதுரை சூப்பர் ஜெயண்ட்' அணிக்காக தமன் இசையில் சிம்பு மற்றும் 'நெருப்புடா' புகழ் அருண்காமராஜ் ஒரு தீம் பாடலை பாடுகின்றனர். 'ஆட்டைக்கு ரெடியா' என்று தொடங்கும் இந்த பாடல் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் இதே தினத்தில் 'மதுரை சூப்பர் ஜெயண்ட்' அணியின் லோகோ மற்றும் வீரர்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு இளைஞர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.