close
Choose your channels

பிரபாஸ் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல்

Thursday, September 6, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'பாகுபலி', 'பாகுபலி 2' ஆகிய இரண்டு பிரம்மாண்ட வெற்றி படங்களுக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் தற்போது "சாஹூ" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இதனையடுத்து அவர் பிரபல இயக்குனர் K.K.ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கின்றார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என முன்று மொழிகளில் மிகுந்த பொருட்செலவில பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றார்.

கோபி கிருஷ்ணா மூவிஸ் உடன் இணைந்து UV கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் துவக்க காட்சி இன்று படமாக்கப்பட்டது.

ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அமித் திரிவேதி, படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத், புரொடக்ஷன் டிசைனராக ரவீந்தர் என பல பிரபலங்கள் இப்படத்தில் பணியாற்றுகின்றனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை பல பிரபலமான சர்வதேச இடங்களில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தனது தனித்துவமான நடிப்பால் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ள நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.