close
Choose your channels

மொட்டை மாடியில் வேற லெவலில் சிலம்பம் சுற்றும் மாளவிகா மோகனன்.. கிளாமர் வீடியோ..!

Wednesday, May 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மாளவிகா மோகனன் மொட்டை மாடியில் வேற லெவலில் சிலம்பம் சுற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன் அதன்பின்னர் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ தனுஷ் நடித்த ’மாறன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ’தங்கலான்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். ’தங்கலான்’ படத்திற்காக அவர் சிலம்பம் உட்பட சில தற்காப்பு கலைகளை பயின்றதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டை மாடியில் கிளாமர் உடை அணிந்து சிலம்பம் சுற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் கேப்ஷனாக அவர் கூறியிருப்பதாவது

எனது இன்றைய ட்ரைசெப்ஸ் வொர்க் அவுட்டில் சில அடிப்படை 'சிலம்பம்' வார்ம்அப் இருந்தது. வழக்கமான உடற்பயிற்சி மீண்டும் மீண்டும் அல்லது சலிப்பாக உணரத் தொடங்கும் போது, அதை சுவாரஸ்யமாக வைத்திருக்க சிலம்பம் எனக்கு உதவுகிறது’ என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.