close
Choose your channels

என் சொந்த ஊரில் இப்படி ஆகிவிட்டதே.. அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட மணிரத்னம் பட நாயகி..!

Saturday, August 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’உயிரே’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது சொந்த மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமானோர் பலியானது குறித்த அதிர்ச்சி வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு சீட்டுக்கட்டு போல பல கட்டிடங்கள் சரிந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியது. குறிப்பாக இமயமலை அடிவாரத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்ததாகவும் பலர் பலியானதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் பிறந்து வளர்ந்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிலச்சரிவால் வீடுகள் இடிந்து விழுந்த வீடியோவை வெளியிட்டு தனது அதிர்ச்சியை தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து அப்படியே நொறுங்கி விட்டேன் என்றும் என் சொந்த மாநிலத்தில் ஏற்பட்ட இந்த பாதிப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது இரங்கல்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.