close
Choose your channels

'மங்காத்தா 2', கேஷுவல் விஜய், 'பில்லா 2'. வெங்கட்பிரபுவின் கனவுகள்

Thursday, August 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'சென்னை 600028' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெங்கட்பிரபு, தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகளை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தனது அடுத்த படங்கள் குறித்த தகவல்களை அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகம் போலவே 'மங்காத்தா 2' இரண்டாம் பாகத்தை உருவாக்க ரசிகர்களை போலவே எனக்கும் ஆசை உள்ளது. அது 'மங்காத்தா' படத்தின் தொடர்ச்சியா? அல்லது முற்றிலும் வேறு கதையா? என்பதை விரைவில் முடிவு செய்யவுள்ளேன்.
அதேபோல் எனக்கு விஜய்யை வைத்து கேஷுவலாக ஜாலியா ஒரு படம் இயக்கணும்ன்னு ரொம்ப நாள் ஆசை. இவை இரண்டும் விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது பேட்டியில் 'பில்லா 2' படத்திற்கான ஐடியா கிடைத்துள்ளது. சிம்புவுடன் இணைந்து 2018ல் இந்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன்' என்று கூறியுள்ளார்
அஜித், விஜய் மற்றும் சிம்பு படங்கள் குறித்த வெங்கட்பிரபுவின் கனவுகள் விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.