close
Choose your channels

மெர்சல் தயாரிப்பாளர் ஹேமாருக்மணி வெளியிடும் டிரைலர்

Thursday, October 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் நிலையில் வரும் தீபாவளி தினத்தில் தடைகள் பல தகர்த்து பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த படத்தின் டீசர், பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியிட வாய்ப்பு இல்லை என்று தேனாண்டாள் பிலிம்ஸ் சி.இ.ஒ ஹேமாருக்மணி கூறியதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு ஹேமாருக்மணி அவர்கள் 'நொடிக்கு நொடி' என்ற படத்தின் டிரைலரை வெளியிடவுள்ளார். காமன்மேன் சதீஷ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு எம்.எஸ்.ஜோன்ஸ் இசையமைத்துள்ளார். பிரவீண் பாலு ஒளிப்பதிவில், ரிச்சர்ட் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. '

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.