close
Choose your channels

சூப்பர் ஸ்டாரின் தங்கை கேரக்டரில் மியாஜார்ஜ்

Tuesday, March 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான 'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை மியா ஜார்ஜ் அதன் பின்னர் தமிழில் 'அமரகாவியம்' , 'வெற்றிவேல்' , 'ஒரு நாள் கூத்து' , 'ரம்' , 'எமன்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மம்முட்டி நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் “ பரோல் “ என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் மியா ஜார்ஜ் கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு தங்கையாக நடிக்கிறார். அண்ணன் மேல் தங்கையும் தங்கை மேல் அண்ணனும் மிகவும் பாசமாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பரோல் திரைப்படம் இடுக்கி போன்ற மலையும் மலை சார்ந்த இடத்திலும் நடக்கும் ஒரு கதையாக உருவாகியுள்ளது.

எப்போதும் சிறந்த கதையில் ஒரு அங்கமாக இருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மியா கண்டிப்பாக இப்படத்திலும் அதை தொடர்வார் என்று எதிர்பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.