close
Choose your channels

ரஜினி போன்ற நல்ல மனிதருக்கு அரசியல் தேவையில்லை: பிரபல நடிகர்!

Friday, January 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் ஆன்மீக அரசியலை பொதுமக்களிடம் அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என சமீபத்தில் அறிவித்தது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் முடிவு குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கடந்த இரண்டு நாட்களாக தங்களது கருத்தை கூறி வருகின்றனர். இந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு ரஜினியின் இந்த முடிவை வரவேற்றுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

அரசியல் என்பது மோசமான விளையாட்டு என்றும், ரஜினி போன்ற நல்ல மனிதர்கள் அரசியலில் நுழைவது நல்லதல்ல என்றும், இதை நான் அவரிடமே பலமுறை அறிவுறையாக கூறி உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். ரஜினி தற்போது எடுத்துள்ளது நல்ல முடிவு என்றும், ரஜினி ரசிகர்கள் இந்த முடிவை புரிந்துகொண்டு அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்றும் மோகன்பாபு குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.