close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியாகும் 'விஸ்வரூபம் 2' பாடல் குறித்த முக்கிய தகவல்

Wednesday, June 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடித்து, இயக்கிய 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகியுள்ளது. முதல் பாகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வாரயிறுதியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது இந்த படத்தின் சிங்கிள் பாடலை வெளியிடவுள்ளதாக கடந்த வாரம் கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்த நிலையில் இந்த பாடல் குறித்த சில விபரங்களை தற்போது பார்ப்போம். இந்த பாடல் நானாகிய நதிமூலமே' என்ற வரிகளுடன் தொடங்குகிறது. முதல் பாகத்தில் இடம்பெற்ற 'உன்னை காணாத நான்' என்று தொடங்கும் பாடலுக்கு இணையாக இந்த பாடல் உள்ளது என்பது சற்றுமுன் வெளியான டீசரில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்த பாடலை கமல்ஹாசன் எழுதி பாடியுள்ளார் என்பதும் அவருடன் கெளஷிகி சக்ரவர்த்தி, மாஸ்டர் கார்த்திக் சுரேஷ் ஐயர் ஆகியோர்களும் பாடியுள்ளனர். ஜிப்ரான் இசையில் இந்த பாடல் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.