close
Choose your channels

அரசியல் கட்சியில் சேர்ந்த நடிகர் நாசரின் மகன்.. உறுப்பினர் அட்டை புகைப்படம் வைரல்..!

Wednesday, March 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் நாசரின் மகன் அரசியல் கட்சி ஒன்றில் இணைந்துள்ளதாக உறுப்பினர் அட்டையுடன் கூடிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக இருந்து வருபவர் நாசர் என்பதும் அவர் நடிகர் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் நாசரின் மகன் ஃபைசல் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள உறுப்பினர் அட்டையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அந்த கட்சியில் உறுப்பினராக சேர செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் இந்த செயலியின் மூலம் இரண்டே நாளில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தார்கள் என்றும் செய்திகள் வெளியாகின.

மேலும் விஜய்யின் அரசியல் கட்சியில் சில திரையுலக பிரபலங்களும் இணைந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது நாசர் மகன் ஃபைசல் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள உறுப்பினர் அட்டையின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே நாசரின் மகன் ஃபைசல் விஜய்யின் தீவிர ரசிகர் என்பதும் அவருடைய பிறந்தநாளின் போது விஜய் நேரடியாக அவரது வீட்டுக்கே சென்று வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.