close
Choose your channels

'எந்த ஒரு தாயும் குழந்தைக்கு ஆபத்துன்னா பாத்துகிட்டு சும்மா இருக்க மாட்டா: நயன்தாராவின் 'O2' டிரைலர்!

Monday, June 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ’O2’ திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

இந்த டிரைலரில் ஒரு பேருந்தில் நயன்தாரா தனது குழந்தையுடன் சென்று கொண்டிருக்கும் போது திடீரென அந்த பேருந்து மண்ணில் மூழ்கி விடுகிறது. இந்த பேருந்தை கண்டுபிடிக்கப்பட்ட மீட்புக்குழுவினர் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் மண்ணில் மூழ்கியுள்ள பேருந்தில் உள்ள பயணிகள் ஆக்சிஜன் இல்லாமல் தவித்து வருகின்றனர்

நயன்தாராவின் குழந்தைக்கு ஏற்கனவே மூச்சு விடும் பிரச்சினை இருக்கும் நிலையில் அவர் எப்படி தனது குழந்தையை காப்பாற்றினார் என்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. 'எந்த ஒரு தாயும் குழந்தைக்கு ஆபத்துன்னா பாத்துகிட்டு சும்மா இருக்க மாட்டா’ என்ற வசனத்துடன் நிறைவடையும் இந்த டீசர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

விஷால் சந்திரசேகர் இசையில் தமிழழகன் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.