close
Choose your channels

ரஜினியின் இன்னொரு கேமியோ படம்.. மகள் தான் இயக்குனர்.. ஹீரோ யார் தெரியுமா?

Thursday, February 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த ’லால் சலாம்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் இன்னொரு திரைப்படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘அக்னி சாட்சி’ உள்பட ஒருசில திரைப்படங்களில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ’லால் சலாம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது ’வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் தெரிகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.