close
Choose your channels

எனது சினிமா வாழ்க்கையின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று: தமன்னா

Saturday, March 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்த கண்ணே கலைமானே' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கி சமீபத்தில் முடிவடைந்தது. மிகக்குறுகிய காலத்தில் திட்டமிட்டபடி படத்தை முடித்த இயக்குனர் சீனுராமசாமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இயக்குனர் சீனுராமசாமி சிறந்த படைப்பை நோக்கி தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும்  கடப்பவர் என்றால் மிகை ஆகாது. சினிமாவின் அடிப்படை உணர்வுகள் தான், என்பதையும் மிக நன்கு புரிந்திருப்பவர் அவர் மனிதர்களின் உணர்வுகளை சமுதாய பொறுப்போடு  அழகாக இணைத்து தருவதில் கை தேர்ந்த சீனு ராமசாமியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த படம் 'கண்ணே கலைமானே'.  

இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விநியோகிஸ்தர்கள் மத்தியிலும் பெரும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது .இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. சீனு ராமசாமி, யுவன் ஷங்கர் ராஜா , கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோரின் கூட்டணி தொடர்ந்து ஹிட் பாடல்கள் கொடுக்கும் கூட்டணி என்பதால் இந்த படத்துக்கு இசை தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த படத்தில் நடித்தது குறித்து நாயகி தமன்னா கூறியபோது, 'நிறைய பேசாமலேயே நடிகர்களுக்கு அவர்களது கதாபாத்திரத்தையும் , தனக்கு என்ன வேண்டும் என்பதையும் மிக சிறப்பாக விளக்கி, வேலை வாங்குபவர்  இயக்குனர் சீனு ராமசாமி. 'தர்மதுரை' படத்திற்கு பிறகு அவருடன் சேர்ந்து மீண்டும்  பணிபுரியவேண்டும் என ஆவலோடு இருந்தேன். எனது சினிமா வாழ்க்கையின் சிறந்த படங்களில் 'கண்ணே கலைமானே' நிச்சயம் ஒன்றாகும். இந்த படத்தில்  உதயநிதி அவர்களின் கதாபாத்திரத்தையும் நடிப்பையும் தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள். அவ்வளவு சிறப்பாக அவர் நடித்துள்ளார். 'கண்ணே கலைமானே' படத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் '

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.